பதிவு செய்த நாள்
05
ஜூலை
2014
02:07
செஞ்சி: செஞ்சி தாலுகா மகாதேவி மங்கலம் கிராம பிடாரியம்மன், காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.3ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதற்கால பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பூஜையும், இரவு 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யந்திர பிரதிஷ்டையும் நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, தன பூஜை, தம்பதி பூஜை, மூல மந்திர ஜப பாராயணம், 9.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 10 மணிக்கு கடம் புறப்பாடும் தொடர்ந்து பிடாரியம்மன், காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை ராமச்சந்திர அய்யர் தலைமையில் குழுவினர் செய்தனர்.