பதிவு செய்த நாள்
05
ஜூலை
2014
02:07
பண்ருட்டி அடுத்த நத்தம் அலமேலுமங்கை தாயார் சமேத வைகுண்டவாசபெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோஷணம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 2ம் தேதிமாலை ஆச்சாரியார் அழைப்பு, பகவத்பிரார்த்தனை, எஜமான் சங்கல்பம்,அனுக்ஞை, வேதபாராயணம் துவங்கியது.நேற்று முன்தினம் (3ம் தேதி) காலை7:30 மணிக்கு யாகசாலை பிரவேசம்,ஹோமங்கள், பூர்ணாகுதி, மருந்து சாத்துதல், மாலை 4:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 தீபாராதனை நடந்தது.
நேற்று (4ம் தேதி) காலை 6:00மணிக்கு விஸ்வரூபம், யாகசாலை,ஹோமங்கள், 9:00 மணிக்கு யாத்ராதானம் கடம்புறப்பாடாகி 9:15 மணிக்குமூலவர் விமானங்களுக்கு மகா சம்ரோஷணம் நடந்தது.