ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் சாரம் கட்டும் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2014 03:07
திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில், கும்பாபிஷேக விழாவுக்காக, சாரம் கட்டும் பணிகள் நேற்று துவங்கியது.திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் பணிக்கான துவக்க விழா, கடந்த 5ம் தேதி துவங்கியது. அதை தொடர்ந்து, நேற்று சித்திரைவீதியில் உள்ள தலையாரி கோபுரத்தில், சாரம் கட்டும் பணி துவக்கப்பட்டது. மேலும், ஆயிரங்கால் மண்டப முன்புறம், மத்திய மண்டப்பங்களிலும், சாரங்கள் கட்டப்படுகிறது. பிறகு, மண்டபங்களுக்கும், கோபுரங்களுக்கும் வர்ணங்கள் பூசப்படுகிறது.