Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வி அம்மன், நீலகண்டி அம்மன் ... அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி வீதியுலா! அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரநல்லூர் பகவதியம்மன் கோவிலில் தங்க கொடிமர பிரதிஷ்டை இன்று துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2014
10:07

பாலக்காடு: கோட்டயம் குமாரநல்லுார் பகவதி அம்மன் கோவில் தங்க துவஜ பிரதிஷ்டை திருவிழா, இன்று துவங்குகிறது. முனிவர் பரசுராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 108 துர்க்கையம்மன் கோவில்களில் ஒன்று, புகழ்பெற்ற குமாரநல்லுார் பகவதி அம்மன் கோவில். இக்கோவில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. 1914ல், ராஜாக்களின் அனுமதியுடனும், ஒத்துழைப்புடனும் மூலஸ்தானம் முன்பு, தங்க துவஜ (கொடி கம்பம்) அமைத்து, கோவில் நிர்வாகம் விழா கொண்டாடியது. இந்த தங்க துவஜ பிரதிஷ்டையின் நுாற்றாண்டு விழா, இன்று முதல் வரும் 18ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகிறது.இவ்விழா, கலசபூஜைகளுடன் தாந்திரிக குலபதி கடியக்கோல் இல்லத்து பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரி தலைமையிலும், மதுரை இல்லத்து பிரம்மஸ்ரீ அச்சுதன் நம்பூதிரி, கோவில் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ ஆறம்பாடி மாதவன் சுதேவ் ஆகியோரின் முன்னிலையிலும் இன்று(ஜூலை 7) நடத்தப்படுகிறது. மாலையில், அஷ்டபந்த கலச நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி காலை 10.31 மணி முதல் 11.40 மணி வரை, கன்னி ராசி சுப முகூர்த்தத்தில் கலசாபிஷேகமும், ராமாயண மாத துவக்க நாளான 17ம் தேதி, கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. வரும் 18ம் தேதி காலை 6.30 முதல் மாலை 7.00 மணிவரை, கோவில் வளாகத்தில் உள்ள சிறப்பு மண்டபத்தில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை ஐப்பசி ... மேலும்
 
temple news
அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் ... மேலும்
 
temple news
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர்  புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை ஸ்ரீவாரி கோவில் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ எடுத்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar