செல்வி அம்மன், நீலகண்டி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2014 05:07
திருநெல்வேலி: கடையநல்லூர் சோழியப்ராமண சமுதாயத்திற்குட்பட்ட, அண்ணாமலை நாதர் கோயிலின் உப கோயிலான உத்ர த்வார பாலினி என்ற வடக்கு வாசல் செல்வி அம்மன், ஸ்ரீநீலகண்டி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 7ம் தேதி( ஆனி மாதம் 23ம் தேதி) காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை முதல் கால பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு 2ம் கால பூஜை, மாலை 7 மணிக்கு 3ம் கால பூஜையும், 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு 4ம் கால பூஜை, மாலை 6 மணிக்கு 5ம் கால பூஜை, 7.7.14 திங்கள் கிழமை காலை 4 மணிக்கு 6ம் கால பூஜைக்கு பின் காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மகா கும்பாபிஷேம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை பிரம்மஸ்ரீ கி. சேஷன் (எ) ராமசாமி ஐயர், நயினாகரம், சிவஸ்ரீ முத்துக்குமார் பட்டர் செய்துள்ளனர்.