பதிவு செய்த நாள்
09
ஜூலை
2014
02:07
எர்ணாவூர் : எர்ணாவூர், எர்ணீஸ்வரர் கோவில் நிலங்களை மீட்டு, சிலைகளை பாதுகாக்க, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில், சொர்ணாம்பிகை உடனுறை எர்ணீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த ௧௯௫௭ம் ஆண்டில் இருந்து, கோவில் பராமரிப்பு பொறுப்பை, இந்து சமய அறநிலையத்துறையினர் கவனித்து வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்கள், திருவொற்றியூர், எர்ணாவூர், சத்தியமூர்த்தி நகர் உட்படபல்வேறு பகுதியில் உள்ளன. ஆனால், அதிகாரி களின் அலட்சியத்தால், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு, கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு, சரிவர பராமரிப்பு இல்லாததால், கோவில் சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்து உள்ளன. கோவிலின் முகப்பில் அமைந்துள்ள சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.கோவில் நிலங்களை மீட்டு, சிலைகளையும், கோவிலையும் பாதுகாக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.