பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, என்.என்.கண்டிகை கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில், 14ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி ÷ காவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 9:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 7:30 மணிக்கு உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது.