இலங்கையை ஆட்சி செய்த கண்டியரசன் எனும் மன்னன் முருகனின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். அவனது கனவில் தோன்றிய முருகன், சந்தன மரம் ஒன்றை கடலில் போடு என்று சொன்னார். மன்னனும் கடலில் போட்டு விட்டான். அம்மரம் திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடலில் மிதந்து வந்தது. அப்போது கடலில் நீந்திக் கொண்டிருந்த எருமை ஒன்று அம்மரத்தை தள்ளிக்கொண்டு கரை சேர்த்தது. இதைக்கண்ட பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். அப்போது அசரீரியாக, இம்மரத்தையே எனக்கு கொடிமரம் ஆக்குவீர்களாக ! என்று குரல் ஒலித்தது. பக்தர்கள் அம்மரத்தையே முருகன் சன்னதியில் கொடிமரமாக வைத்தனர். இப்போது இக்கொடிமரத்தை தங்கத் தகட்டால் வேயப்பட்டுள்ள நிலையில் தரிசிக்கலாம்.