முருகனுக்கு மயிலுடன் ஆட்டுக்கடாவும் சில கோயில்களில் வாகனமாக இருக்கிறது. நாரதர் செய்த வேள்வியில் இருந்து ஆட்டுக்கடா வடிவில் ஒரு அசுரன் தோன்றினான். அதை அடக்கும் சக்தி யாருக்கும் இல்லை. முருகப்பெருமான் கிடாவை அடக்க, தன் சேனைத்தலைவர் வீரபாகுவை அனுப்பினார். வீரபாகு அதை அடக்கி, முருகனிடம் ஒப்படைத்தார். முருகன் அதை தன் வாகனமாக்கிக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் விழாவில், முருகன் ஆட்டுக்கடா வாகனத்தில் பவனி வருவார்.