சிலமலை வீருசிக்கம்மாள் கும்பாபிஷேக விழா; நாளை நடக்கிறது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2014 12:07
போடி : சிலமலை வீருசிக்கம்மாள் கோயில் கும்பாபிஷேக விழாநாளை(ஜூலை 16) நடக்கிறது. போடி அருகே உள்ள சிலமலை ஸ்ரீமது வீருசிக்கம்மாள் மலைக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூலை 14) துவங்கியது. இன்று(ஜூலை 15) காலை 8:30 மணிக்கு மேல் துவாரதி பூஜை, சூரியபூஜை, 108 திரவியாதி ஹோமம், தேவாரம், திருவாசகம், மகாபூர்னாஹூதி தீபாராதனை. காலை 11 மணிக்கு தாய்மாமன்மார்களுக்கு மாலை மரியாதை. மருமக்கள்மார்களுக்கு மாலை மரியாதை, பூசாரிக்கு மாமன்மார்கள் பட்டம் கட்டுதல். இரவு 8:30 மணிக்கு யாகசாலை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நாøள் காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோமாதா பூஜை, கடங்கள் புறப்பாடு, காலை 10:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 11 மணி விருந்தினர்களும், தயாதிகளும் உணவருந்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை காமுகுல ஒக்கலிகர் (காப்பு) ஏந்தார் குல தாயாதிகள் செய்துள்ளனர்.