பழநி : உலக நலன்வேண்டி, பழநி பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் மூன்று கும்பங்கள் வைத்து சிறப்புஹோமம் நடந்தது. பெரியநாயகியம்மன், சோமாஸ்கந்தர், சிவன், நடராஜர், முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.சண்முகநதிக்கரையிலுள்ள பெரியாவுடையார் கோயிலில், பெரியாவுடையாருக்கு அபிஷேகங்கள் செய்து அன்னாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சி உபயதாரர் கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன்விஷ்னு, நரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பெரியநாயகியம்மன் கோயில் நிகழ்ச்சி உபயதாரர் பாலாஜிபவன் ஓட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து, கண்பத் ஓட்டல் உரிமையாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.