பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
12:07
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மழை வேண்டி, கிராம பொதுமக்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் யூனியன் ஜிட்டாண்டஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குழிக்காடு பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், ஏரி, கிணறு, குளம் வறண்டு, விவசாய தொழில் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக, பொதுமக்கள் நிலமிருந்தும், கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த ஆண்டு பருவமழை, நல்ல முறையில் பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி, பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஏரிக்கரையில் சிறப்பு யாகம் மற்றும் வருண பகவான், வன தேவதைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பெண்கள் ஒப்பாரி வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர்.