வேதாரண்யம்: வேதாரண்யம் நாகை காசி விஸ்வநாதர் கோவிலில், 82 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 11ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலையில், புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் வரப்பட்டு, 10.30 மணிக்கு கும்பா பிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கருவறையில் மூல விக்ரகங்களுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றப்பட்டது. விழாவில், வேதாரண்யம் நீதிமன்ற நீதிபதி லதா, நாகை உதவி கமிஷனர் ரத்தினவேலு, தஞ்சை உதவி கமிஷனர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.