புனித சந்தியாகப்பர் சர்ச்சில் கொடியேற்றம்; ஜூலை 24ல் தேர்பவனி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2014 11:07
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் சர்ச்சில் தேர்பவனி திருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் வட்டார கத்தோலிக்க அதிபர் ராஜமாணிக்கம் கொடியேற்றி சிறப்பு திருப்பலி நடத்தினர். தங்கச்சிமடம் பங்கு தந்தை ராஜா ஜெகன், தங்கச்சிமடம் ஜமாத் தலைவர் ராஜா ஷாகிப், ஊராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம், விழாக்குழு நிர்வாகிகள் ஜெரோன், பெனடிக்ட். அமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். தினமும் மாலை 5.30 மணிக்கு வழிபாடு, 6 மணிக்கு திருப்பலி, மறையுரைகள் நடக்கின்றன. ஜூலை 24 தேர்பவனி, 25 மாலை 5.30 மணிக்கு நற்கருணை ஆசி, நிறைவு திருப்பலி நடக்கிறது. ஜூலை 31ல் திருப்பலிக்கு பின், கொடியிறக்கத்தோடு விழா நிறைவடைகிறது.