பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
11:07
போடி : போடி அருகே சிலமலை வீருசிக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலகலமாக நடந்தது. போடி அருகே உள்ள சிலமலை மது வீருசிக்கம்மாள் மலைக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மூன்று நாட்களாக துவாரதி பூஜை, சூரிய பூஜை, 108 திரவியாதி ஹோமம், தேவாரம், திருவாசகம், மகாபூர்ணஹூதி தீபாராதனை, தாய்மாமன்களுக்கு மாலை மரியாதை, மருமக்கள்மார்களுக்கு மாலை மரியாதை, பூசாரிக்கு மாமன்மார்கள் பட்டம் கட்டும் நிகழ்ச்சியும், யாகசாலை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், விக்னேஸ்வர பூஜை, கோமாதா பூஜை, கடங்கள் புறப்பாடும், தயாதிகளுக்கு உணவருந்தும் நிகழச்சியும் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 10.25 மணிக்கு வீருசிக்கம்மாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வீருசிக்கம்மாளின் அருள் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காமுகுல ஒக்கலிகர் (காப்பு) ஏந்தர் குல தாயாதிகள் செய்திருந்தனர்.