பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
04:07
*கொழுந்து விட்டெரியும் நெருப்பாக இருங்கள். வாழ்வில் எதிர்ப்படும் ஒவ்வொரு நிகழ்வும் நமது முன்னேற்றத்திற்கு உதவுவதற்காகவே என்று எண்ணுங்கள்.
*உங்கள் செயல்கள் மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்கட்டும். ஆனால், உங்களுக்குடைய சொந்த மகிழ்ச்சிக்காக எதையும் செய்யாதீர்கள்.
*பரபரப்பு, கலகம், பதட்டம் இவற்றைத் தவிர்த்து விடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் பூரண அமைதியைக் கடைபிடியுங்கள்.
*பிறரிடம் காணப்படும் குறைகளை மாற்றும் ஆற்றல் உங்களிடம் இருந்தால் அன்றி, யாரையும் குறை சொல்ல முயலாதீர்கள்.
*உங்கள் முன் வைத்திருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். உடலாலும், மனதாலும் அதைநோக்கி முன்னேறும் விதத்தில் செயல்படுங்கள்.
*முன்னேறுவதற்காகவே நாம் பூமியில் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறாவிட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகி விடும்.
*சொற்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மிக அவசியம் இருந்தால் ஒழிய பேச வேண்டாம்.
*தளராத முயற்சி உங்களுக்குள் உணர்ச்சியைத் துõண்டும். அதன் மூலம் இறை அருளாகிய திவ்ய ஒளி உங்கள் மீது படும்.
*உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர், தலைவர் என்பதை உணருங்கள்.
*உள்ளத்து உறுதியும், பெருமித உணர்வும் கொண்டு உங்கள் பாதையில் நடைபோடுங்கள்.
*எப்போதும் நல்லதையே எண்ணி செயல்படுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*அச்சம் நோயை விட பயங்கரமானது. ஆபத்தும் கொண்டது. அதுவே உங்களிடமிருந்து களையப்பட வேண்டிய முதல் குறைபாடு.
*நேர்மை, பொறுமை, வலிமை இவற்றைப் பயன்படுத்தி அச்சத்தின் நிழல் கூட இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
*அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்கட்டும். எதிர்மறையான விஷயங்களைக் கைவிடுங்கள். எங்கும் கடவுளின் அருட்காட்சியை மட்டும் காணுங்கள்.
*உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களைச் சுற்றிலும் அமைதி, நம்பிக்கை, மகிழ்ச்சி மிக்க சூழ்நிலையை உருவாக்க முயலுங்கள்.
*எந்த சூழ்நிலையிலும் கடவுளின் பக்கம் நில்லுங்கள். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் உண்மையை கைவிட்டு விடாதீர்கள். உண்மைக்காக
போராடுவதே உண்மையான வீரம்.
* உழைப்பே கடவுளுக்கு மிகவும் விருப்பமான பிரார்த்தனை. ஒருபோதும் மனிதன் மற்றவர் உழைப்பில் வாழ முற்படுவது கூடாது.
*துணிவுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கையைக் கை கொள்ளுங்கள். வாழ்க்கை என்னும் சுரங்கப்பாதையின் முடிவில், வெற்றி என்னும் பேரொளி நமக்காக காத்திருக்கிறது.
*எந்த நிலையிலும் கடவுளின் உதவியை பெற கற்றுக் கொள்ளுங்கள். அது அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும். - உற்சாகப்படுத்துகிறார் ஸ்ரீஅன்னை