ஒருசமயம், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. 33 நாட்களாக கடும் போர். 32 நாட்களாக தேவர்கள் பக்கமே வெற்றி. 33வது நாள் படுதோல்வி அடைந்தார்கள். தோல்விக்கான காரணம் பற்றி அறிய கூட்டம் கூடியது. மற்ற நாட்களில், ஒழுங்காக காயத்ரி மந்திரம் பாராயணம் செய்து விட்டு போனவர்கள், 32 நாள் வெற்றி மமதையில், அன்று பாராயணம் செய்யாமல் போய் விட்டார்கள். விளைவு... தோல்வியைத் தழுவினார்கள். மனிதர்களும் இதுபோல தான்! நமக்கு இவ்வளவு அழகான உடலைக் கொடுத்து, வசதியைக் கொடுத்து வாழச்செய்தான் இறைவன். ஆனால், மனிதன் அவனை மறந்தான். இஷ்டத்திற்கு வாழ்ந்தான். குடித்தான், கும்மாளம் போட்டான். கடைசியில், நோய்க்கு ஆளானதும்,“ஐயோ! கடவுளே! என்ன பாவம் செய்தேன்! வலி பொறுக்க முடியலியே! காப்பாற்று!” என கதறுகிறான்.ஓட்டுப் போட்ட மக்களை மறந்து, இஷ்டத்திற்கு ஆடினால், அரசியல் கட்சிக்கு தோல்வி ஏற்படுகிறது. நமக்கு நல்வாழ்வு அளித்த கடவுளை மறந்தால், வாழ்க்கையே ஆடி விடுகிறது.அரசியல்கட்சிகளும் திருந்தணும்! மக்களும் திருந்தணும்!சரிதானே!