சிவகங்கை: தேவகோட்டை சீனமங்கலம் நகரத்தார் திருப்பரங்குன்றம் பாதயாத்திரை ‘டிரஸ்ட்’ சார்பில், 22ம் ஆண்டு ஆடி கார்த்திகையை முன்னிட்டு எஸ். சொக்க நாதபுரம் சிவன் கோவிலில் இருந்து காவடி யாத்திரை குழுவினர் ஜூலை16ல் திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்டனர். சிலர் காவடி தூக்கியும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் செல்கின்றனர். வழிநெடுங்கிலும் இக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சிவகங்கை பையூரில் அரைக்காசு அம்மன்கோவிலில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்குழுவினர் ஜூலை 19ல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை சென்றடைகின்றனர். சரவண பொய்கையில் நகரத்தார்கள் சார்பில் வரவேற்கப்படுகிறது. ஜூலை 20ல் காவடி, பால்குடத்துடன் கிரிவலம் சென்று, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் என, நகரத்தார் திருப்பரங்குன்றம் பாதயாத்திரை டிரஸ்டிகள் தெரிவித்தனர்.