விழுப்புரம்: விழுப்புரம் கே.கே., ரோடு கன்னியாக்குளக்கரை கன்னியம்மன் கோவி லில் தீமிதி விழா நடந்தது. விழுப்புரம் கே.கே., ரோடு கன்னியாக்குளக்கரையில் உள்ள கன்னியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 16ம் தேதி துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு வீரவாழியம்மன் கோவிலில் இருந்து கன்னியம்மனுக்கு பால் குடம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கரகம் ஜோடித்து, அலகு தரித்து பக் தர்கள் வீதியுலா சென்றனர். மாலை 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தீமிதி உற்சவம் நடந்தது. இரவு மின் அலங்காரத்தில், அம்மன் வீதியுலா நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.