சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளி விழா, நேற்று நடந்தது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பண்டிகையில், முக்கிய விழாவாக, ஆடி முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பண்டிகை விழாவின், முதல் வெள்ளிக்கிழமை விழா, நேற்று காலை நடந்தது. இதில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.