பதிவு செய்த நாள்
19
ஜூலை
2014
02:07
திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டி வயிரவர் கோயிலில்,ஜூலை 22ல் மகா உற்சவம் துவங்குகிறது.இக்கோயிலில் ஆடி மகா உற்சவம், தேரோட்டத்துடன் 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 22 காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 3 மணிக்கு அனுக்ஞை பூஜைகளுடன் துவங்கி, காப்புக் கட்டி உற்சவம் துவங்கும். தினசரி காலை 8.30 மணிக்கு, சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடும், இரவு 8 மணிக்கு,பல்வேறு வாகனங்களில், வயிரவர் திருவீதி உலாவும் நடைபெறும்.ஜூலை 30ல், ஒன்பதாம் நாள் விழாவில், மாலையில் தேரோட்டமும், மறுநாள்,பத்தாம் நாள் விழாவில்,காலையில் அனைத்து சுவாமிகளுக்கு அபிஷேகம்,இரவில் பூப்பல்லக்கு நடைபெறும்.பதினொராம் நாள் விழாவன்று, காலையில் தீர்த்தவாரி, மாலையில் திருக்கல்யாணம், இரவில் பஞ்சமூர்த்திகளுடன் வயிரவர் திருவீதி உலா நடைபெறும்.ஏற்பாட்டினை, ஏழக பெருந்திருவான வயிரவன் கோயில்,நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்கின்றனர்.