மதுரை;ஆடி அமாவாசையை (ஜூலை 26) முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ர்ப்பணம் செய்வோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 16 கால் மண்டபத்தில் பூஜைகள், தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 முதல் மதியம் 1 மணி வரை கோயில் நிர்வாகம் மூலம் அனுமதி பெற்ற புரோகிதர்கள் பூஜைகள், தர்ப்பணம் செய்வர். புரோகிதம் செய்ய 20 ரூபாய், தர்ப்பணம் செய்ய 30 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று கொள்ள வேண்டும், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.