உடுமலை 151 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2014 02:07
உடுமலை: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, மடத்துக்குளம் ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில், 151 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.இந்து முன்னணி மடத்துக்குளம் ஒன்றிய செயற்குழு கூட்டம், மடத்துக்குளத்தில் நடந்தது. மாரிமுத்து தலைமை வகித்தார். கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா ஆக., 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை நான்கு நாள் விழாவாக கொண்டாடுவது; கோலப்போட்டி, பேச்சு போட்டி, விளக்கு பூஜைகள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மடத்துக்குளம் கிளை பொதுச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்ட, நிர்வாகிகள் பங்கேற்றனர்.