பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
02:07
திருவள்ளூர் : பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடித் திருவிழாவில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சாலையின் ஓரத்தில் இருந்து, 3 அடி தள்ளி கடைகளை அமைக்க வேண்டும் என, ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.ஆலோசனை கூட்டம் : பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், ஆடித்திருவிழா குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்றுமுன்தினம் நடந்தது. ஆட்சியர் வீர ராகவ ராவ், தலைமை வகித்து பேசியதாவது: ஆடித் திருவிழாவிற்கு வருகைத்தரும் பக்தர்களுக்கு, குடிநீர், கழிப்பறை, குப்பைத் தொட்டி அமைத்தல் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்து, பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறையின்றி வழங்கவும், நவீன நடமாடும் கழிப்பறைகள் அமைக்கவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தேவையான அளவிற்கு
பற்றாக்குறையின்றி குப்பைத் தொட்டிகள் அமைக்கவும் வேண்டும்.பிளாஸ்டிக்கு தடை : பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்து, துணி பைகளை பயன்படுத்திட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோவில் நிர்வாகி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆரணி ஆற்றின் கரையில் தற்காலிகமாக அமைக்கப்படும் கொட்டகைகளை எளிதில் தீ பிடிக்காத பொருட்களை பயன்படுத்தி அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடைக்காரர்கள், சாலை ஓரத்தில் இருந்து, 3 அடி தள்ளி அமைக்க வேண்டும்.இவ்வாறு, ஆட்சியர் வீர ராகவ ராவ் கூறினார்.கூட்டத்தில், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)
லக் ஷ்மண், வருவாய் கோட்ட அலுவலர் அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.