விழுப்புரம்: வளவனூர் பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் சிறப்பு தியான முகாம் நடந்தது. வளவனூர் மேற்கு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் தினந்தோறும் காலை மற்றும் இரவு 7:00 மணி முதல் 8:30 வரை இலவச தியான பயிற்சிகள் நடக்கிறது. இதன்படி நேற்று காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சிறப்பு தியான முகாம் நடந்தது. இதில் வாழும் கலை, மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல், நேர்மையான எண்ணங்கள், தற்கொலையில் இருந்து விடுபடுதல், ஆன்மிக ஞானம் பற்றி விளக்கம் அளிக்கபட்டது. இதில், செல்வ முத்துக்குமரன் தியான பயிற்சிகள் அளித்தார்.