பண்ருட்டி அடுத்த புலவனூர் ஸ்ரீபாலமுருகன் கோவிலில் 37ம் ஆண்டு காவடி அபிஷேகபூஜை நடந்தது. கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. காவடி அபிஷேக பூஜையையொட்டி நேற்று காலை6.00மணிக்கு பெண்ணையாற்றாங்கரையில் காவடி எடுத்தல், பாலமுருகன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு செடல், மிளகாய் பொடி அபிஷேகம் மற்றும் தேர் இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 9 மணிக்கு உற்சவர் பாலமுருகன் சுவாமிகள் வீதியுலா நடந்தது.