பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
12:07
பள்ளிப்பட்டு: நெடியம், கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலில், நேற்று, ஆடிக்கிருத்திகையை ஒட்டி, திரளான பக்தர்கள், காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.மலர்க்காவடி பள்ளிப்பட்டு அடுத்த, நெடியம், கஜகிரி செங்கல்வராயன் மலைக் கோவிலில், நேற்று ஆடிக்கிருத்திகையை ஒட்டி, திரளான பக்தர்கள், சுவாமிக்கு மலர்க்காவடி எடுத்து வந்தனர். இந்த மலை, யானை படுத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டது என்பதால், கஜகிரி என, பெயர் பெற்றது. கொற்றலை ஆற்றங்கரையில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. மலை மீது, எந்த நாளிலும் வற்றாத சுனைகள் ஏராளமாக உள்ளன. மிகப்பெரிய குன்றின் மீது, கோவில் அமைந்துள்ளது. நெடியம், கொளத்துார், வெங்கம்பேட்டை, சொரக்காய்பேட்டை, பொதட்டூர் பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், நேற்று, ஆடிக்கிருத்திகையை ஒட்டி, மலர்க் காவடிகளை சுமந்து வந்து, சுவாமிக்கு செலுத்தினர்.குதிரை வாகனம்நேற்று முன்தினம், இரவு முதலே, மலைக்கோவில் தங்கி, நேற்று அதிகாலையில், சுவாமியை தரிசனம் செய்தனர். தங்க குதிரை வாகனத் தில் உற்சவர் செங்கல்வராய சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல், மாலை வரை, மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல், அத்திமாஞ்சேரிப்பேட்டை நெல்லிக்குன்றம் மலைக்கோவிலிலும் திரளான பக்தர்கள், காவடி எடுத்துவந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.