திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, 2008 காவடி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில், அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி அளித்த இடம். இதனால், முருக பக்தர்கள் ஆடி கிருத்திகை மற்றும் தை கிருத்திகை நாளில் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து வழிபட்டு வருகின்றனர். இதேபோல் நேற்று நடந்த ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், 2008 காவடி ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக மாட வீதியை வலம் வந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.