பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
12:07
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன், நேற்று காலை 10 மணிக்கு கன்னி லக்னத்தில், கொடியேற்றம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.
கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூலை 29ல் தேரோட்டம், ஆக.,1ல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பரமக்குடி: நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாதசுவாமி கோயிலில், ஆடிப்பூர திருக்கல்யாண விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 29ல் அம்மன் தேரோட்டமும், 31 ல் அம்மன் தபசு காட்சி, ஆக., 1 காலை 9.30 முதல் 10.15க்குள் சவுந்தர்யநாயகி - நாகநாதசுவாமி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. ஆக., 7 ல் உற்சவசாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மகேந்திரன், செயல் அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி செய்து வருகின்றனர்.