முருக்கேரி: மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை திரு விழா நடந்தது. மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நகர் கிராமத்தில் உள்ள பாலமுருகன் மலைக்கோவில், அழகிய பாக்கம் கிராமத்தில் உள்ள பாலசுப்ரமணிய கோவில், ராவணாபுரம் முருகன் கோவில், கோணவாயன் குப்பம் முருகன் கோவில்களில் நேற்று ஆடி கிருத்திகை திருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 8.00 மணிக்கு மூலவர் முருகபெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவில் குளக்கரை அருகில் பொங்கல் வைத்து படையலிட்டனர். மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் வழங்கினர்.