திண்டிவனம்: திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி கடந்த 16 ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று நல்லாவூர் புதூர் ஏழுமலை சுவாமிகள் முன்னிலையில் அலகு குத்திய பக்தர்கள், பால்குடம் எடுத்தனர். பெண்கள் தீ மிதித்தனர். 20 அலங்கரிக்கபட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இரவு 7 மணிக்கு மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. இன்றிரவு 7 மணிக்கு, இடும்பன் பூஜை நடக்கிறது. கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.