உளுந்தூர்பேட்டை: பாதூர் கிராமத்தில் பெரியாயி அம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம், விளக்கு பூஜைகளும் நடந்தன. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் கிராமத்தில் பெரியாயி அம்மன் கோவிலில் 3 மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்தது. ஆடி பூரத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு 208 பால் குட ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 7 மணிக்கு 108 விளக்கு பூஜைகள் நடந்தன.