மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதியில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகர் கோவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன், ஆலை வளாகத்தில் உள்ள முருகன் கோவில், ராவுத்தநல்லூர் மலை உச்சி முருகன் கோவில், பொரசப்பட்டு, பவுஞ்சிப்பட்டு, கடுவனூர் போன்ற கிராமங்களில் உள்ள முருகன்கோவிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பான அலங்கார பூஜை மற்றும் சந்தன காப்பு பூஜை செய்தனர். அன்னதானம் வழங்கினர்.