சங்கராபுரம்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்தூர் சரவணபுரம் 64 அடி உயர முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சின்னதம்பி சுவாமிகள் முன்னிலையில் மு ருகனுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வடிவேல் அடிகளார், செழியன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். காட்டுவனஞ்சூர் முருகன் கோவில், ராவுத்தநல்லூர் சக்தி மலை முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.