முருக்கேரி: முருக்கேரி பகுதியில் ஆடி மாத முதல் திங்களை முன்னிட்டு அய்யனாரப்பன் கோவில்களில் திருவிழா துவங்கியது. முருக்கேரி அடுத்த நல்லூர், அசப்பூர், எண்டியூர் தலக்காணிக்குப்பம் கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ள அய்யனாரப்பன் கோவில்களில் ஆடிமாத முதல் திங்கள் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 6.00 மணிக்கு அய்யனாரப்பன் சிலை மற்றும் குதிரைகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அய்யனாரப்பனுக்கு பட்டு வேட்டி கட்டி பூ அலங்காரம் செய்தனர். 10.00 மணிக்கு பக்தர்கள் ஆடு, கோழிகளை பலிகொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். மதியம் 1.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.