திண்டிவனம்: பட்டணம் மதுரைவீரன், முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் பொம்மி சமேத மதுரைவீரன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் 43 ம் ஆண்டு திருவிழா நடந்தது. ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு காலை 6 மணிக்கு விநாயகர், மதுரைவீரன், முத்துமாரியம்மன், அம்மச்சாரம்மன், அங்காளம்மன் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு பூங்கரகம் வீதியுலா 12 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 6 மணிக்கு ஊரணி பொங்கலிட்டு கும்பம் படையல், இரவு 7 மணிக்கு, உற்சவமூர்த்தி காய்கனி அலங்காரத் தில் கரகாட்டத்துடன் வீதியுலா நடந்தது.