பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
02:07
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலின், ஆடிப் பண்டிகை, இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை, இன்று மாலை பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து, ஜூலை, 29ல் கம்பம் நடுதல், ஆக., 5,6ல் பொங்கல் பண்டிகை ஆகியவை நடக்கிறது.இன்று முதல், ஆயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக பெண்கள், அம்மனை தரிசிக்க வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து, பக்தர்கள் எவ்வித சிரமம் இன்றி அம்மனை தரிசிக்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகைக்கான பூச்சாட்டுதல், இன்று இரவு நடப்பதையடுத்து, அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டைபுதுத் தெரு மாரியம்மன் கோவில் உட்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும், இன்று பூச்சாட்டப்பட்டு, பண்டிகை துவங்குகிறது. ஆடிப் பண்டிகை துவங்கியுள்ளதை அடுத்து, மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும், போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளதோடு, போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டனர்.