பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
04:07
கட்டாரிமங்கலம் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் உடனுறை சமேத ஸ்ரீவீரபாண்டீஸ்வரர், அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தர் கோயில், கலியுக தர்ம சாஸ்தா கோயில் வருஷாபிஷேக விழா 2 நாள்கள் நடைபெற்றன. தொடக்கநாளன்று காலையில் மகாகணபதி ஹோமம், ஸ்ரீகலியுக தர்மசாஸ்தா மூலமந்திரயாகம், தொடர்ந்து பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியன நடைபெற்றன.தொடர்ந்து மகாகும்பாபிஷேகம், காலை 10 மணிமுதல் பிற்பகல் 1மணிவரை சுவாமிக்கு லட்சார்ச்சனையும், மாலை 6மணிமுதல் 9மணிவரை அம்பாளுக்கு லட்சார்ச்சனையும் நடைபெற்றன. 2ஆம் நாள் விழாவில், மூலமந்திர மகாயாகம், திவ்யாஹுதி, மகாபூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து 108 சங்காபிஷேகம், புஷ்பாஞ்சலி, ஆலய சேவாரத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. பின்னர் அன்னதானம், திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றன.விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 102ஆவது குருசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தர சத்திய ஞான தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில், இளைய மடாதிபதி ஸ்ரீமத் ஜம்புகேஸ்வர தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவதொண்டர் பட்டமுத்து, ஈசானியசிவம், பாஸ்கரன் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.