திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2014 04:07
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.இந்தாண்டு ஆடிப்பூர விழா திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டாம் பிரகாரம் உலா வந்தார்.கோயிலில் அம்பாளுக்கு10 நாள்கள் நடைபெறும் வளைகாப்பு உற்சவம் மற்றும் 9ஆம் நாள் அம்பாள் திருத்தேர் மாட வீதி உலா சிறப்பானதாகும்.