பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
ஈரோடு: தாராபுரம், தில்லாபுரி அம்மன் கோவிலை, புராதன கோவிலாக அறிவிக்க வேண்டும், என்று, ஜன கல்யாண் அமைப்பினர் கேட்டுக்கொண்டனர். தாராபுரத்தில் உள்ள, ஜன கல்யாண் மாவட்ட தலைவர் லிங்கம் சின்னசாமி விடுத்துள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, திருமுருகன் பூண்டி கோவில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலையும், புராதன கோவிலாக, சட்டசபையில் அறிவித்து, முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கு ஜன கல்யாண் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம். அதுபோன்று, பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டதாக கூறப்படும், தாராபுரம், தில்லாபுரி அம்மன் கோவிலையும், புராதன கோவிலாக அறிவிக்க வேண்டும். தமிழக கோவில்களில், இலவச தரிசனத்தை கொடுத்து, கட்டண முறையை நீக்க வேண்டும். பிற மத கோவில்களில், இலவச தரிசனம் அனுமதிப்பது போல், இந்து மத கோவில்களிலும் இலவச தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.