தூத்துக்குடி: தூத்துக்குடி பனி மய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம்( ஜூலை 26) இன்று காலை 9 மணிக்கு நடக்கிறது. இதற்கான கொடி பவனி விழா நடந்தது. பழமை வாய்ந்த பனி மய மாதா சர்ச் திருவிழா, ஆண்டு தோறும் ஜூலை 26 ம் தேதி துவங்கி ஆக., 5 ம் தேதி நிறைவு பெறும். இதைக் காண வெளி நாடுகளில் இருந்து மக்கள் வருவார்கள். கொடியேற்றத்திற்காக திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடி பவனி நேற்று மாலை 6 மணிக்கு துவங்கியது. கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடியேற்றம்: இன்று காலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலியும்,7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலி. பின் 9 மணிக்கு ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம். பகல் 12 மணிக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி. மாலை 5 மணிக்கு இளையோருக்கான திருப்பலியும், இரவு 7.15 மணிக்கு ஜெபமாலையும், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடக்கிறது.