பாகூர் :சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில், தேர் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.00 மணிக்கு கரக வீதியுலாவும், இதனைத் தொடர்ந்து பகல் 1.00 மணிக்கு திருவிழா கொடியேற்றமும், அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.இரவு 8.00 மணிக்கு அம்மனுக்கு அன்னம் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.