புதுக்கோட்டை திருவரங்குளம் கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2014 03:07
புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் அம்பாள், சுவாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நைனாரிக் குளக்கரையில் தவமிருந்த அம்பாளை சிவாச்சாரிகள் சிறப்பு குதிரை வாகனத்தில் திருமண அரங்குக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சலில் வைத்து நலுங்கு வைக்கும் நிகழ்ச்சியும், திருமாங்கல்யத்துக்கு பல்வேறு வகையான ஹோமம், பூஜைகள் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையடுத்து 12 அறக்கட்டளையைச் சார்ந்த வல்லநாடு நகரத்தார்கள் கொடுத்த 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க அணிகலன்கள் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டது. பிறகு மொய் வாங்கும் நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.