பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2014 03:07
பாளையங்கோட்டை அருள்மிகு கோமதிஅம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அம்பாளுக்கு வளையல், குங்குமம், மஞ்சள், பட்சணங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் திருச்சிற்றம்பலம் வழிபாட்டு அறக்கட்டளைத் தலைவர் கி.சேகரன், செயலர் அ.பரமசிவன், பொருளாளர் க. சந்திரசேகர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.ஆகஸ்ட் 9 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆடி தபசை முன்னிட்டு ஸ்ரீகோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை 6.15 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு மா விளக்கு பூஜை நடைபெறுகிறது.