மயிலம்: சின்னநெற்குணம் காளியம்மன் கோவில் ஆடித் திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது. மயிலம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்திலுள்ள மகாகாளியம்மன் கோவிலில், ஆடி மாத மூன்றாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு காலை 7 மணிக்கு குளக்கரையிலிருந்து பூங்கரம், அக்னி கரகம் எடுத்து வந்தனர். காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் பால் குட ஊர்வலம் துவங்கியது. செடல் , அலகுகளை பக்தர்கள் குத்திக் கொண்டனர். பக்தர்கள் மினி லாரி, டிராக்டர்களை முதுகில் கொக்கி மூலம் இழுத்து சென்று சுவாமிக்கு நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.