பதிவு செய்த நாள்
02
ஆக
2014
01:08
செஞ்சி: கணக்கன்குப்பம் முனீஸ்வரன், அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் கிராமத்தில் கருவாட்சியார் மாந்தோப்பில் உள்ள முனீஸ்வரன், அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. விழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு தேவதானறுஞ்சை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளும், இரவு விக்ரகங்கள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தனம் சாற்றுதலும் செய்ய உள்ளனர். நாளை (3ம் தேதி)
காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாக சாலை பூஜைகளும், சகல தேவதா அஷ்டோத்ர கதம்ப நாமாவலி பாராயணம், மூலமந்திர ஜபம் ஆகியனவும், 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் நடக்கிறது. தொடர்ந்து கடம் புறப்பாடும், 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு மூலவர் அபிஷேகமும் செய்ய உள்ளனர். விழாஏற்பாடுகளை சந்தானம் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.