திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சாகைவார்த்தல் விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அமைச்சாரம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு சக்திகரக ஊர்வலமும் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு பெண்கள் கஞ்சி மற்றும் கூழ் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டனர். இரவு 7:00 மணிக்கு "இன்பமே வடிவாகி நின்றாள் என்ற தலைப்பில் மதுராந்தகம் ரகுவீரபட்டாச்சாரியார் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். தொடர்ந்து 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.