பாகூர் : சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. பாகூர் அடுத்துள்ள சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், செடல் மற்றும் தேர் திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.கடந்த 1ம் தேதி செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 6.00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.முதல்வர் ரங்கசாமி, ராதாகிருஷ்ணன் எம்.பி., அமைச்சர் ராஜவேலு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.