பதிவு செய்த நாள்
04
ஆக
2014
12:08
சிவகங்கை : சிவகங்கையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில் தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.சிவகங்கை, தேரடி கருப்புச்சாமி கோயிலில் காலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவகங்கை, உடையார்சேர்வை ஊரணி சங்கிலி கருப்பண சுவாமிக்கு விக்னேஸ்வர பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை, யாகவேள்வி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.காரைக்குடி, சாணாங்காளியம்மன் கோயிலில், காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் நேர்த்தி செலுத்தி, ஆடிப்பெருக்கை கொண்டாடினர். திருப்புத்தூர், முத்துமாரியம்மன் கோயிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பாரி திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.மதகுபட்டியில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொன்னழகி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. கல்லல் அருகே செம்பனூர் குருநாதர் கோயிலில், பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். மானாமதுரை, பதினெட்டாங்கோட்டை மருதுடையார் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயிலில், ஆடி பெருக்கை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. பள்ளத்தூர் அருகே கொத்தரி 18ம்படி கருப்பர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அன்னதானமும் வழங்கினர். கோவிலூர் பாட்டுடையார் சுவாமி கோயிலில் சிறப்புஅபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். சிங்கம்புணரி: சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் வணிகர் நலசங்கம் சார்பில் சித்தருக்கு பால், பன்னீர், சகலதிரவிய அபிஷேகம், ஆராதனை நடந்தது. 25 ஆயிரம் பேருக்கு, அன்னதானம் வழங்கினர். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன்கோயிலில் பத்துநாள் ஆடிதிருவிழா நிறைவு சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். பாரதி நகர், நொண்டிகருப்பர் கோயிலில், சிறப்புபூஜை, அன்னதானம் நடந்தது.