ராஜபாளையம் : ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில், செல்வவிநாயகர் பிரதிஷ்டை 1914 ல் நடந்து உள்ளது. இதன் நூறாவது ஆண்டுவிழா நேற்று நடந்தது.இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. காலை 8 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 11 மணிக்கு பிரசாதம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.